திற்பரப்பு பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி


திற்பரப்பு பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி
x

திற்பரப்பு பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

கன்னியாகுமரி

குலசேகரம்,

திற்பரப்பு பேரூராட்சியில் குளம் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

தூய்மைப்படுத்தும் பணி

குமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் அடிப்படையில் தெருக்கள், நீர்நிலைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை தூய்மைப்படுத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக திற்பரப்பு பேரூராட்சியில் சனிக்கிழமை தோறும் குளங்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதன்படி பேரூராட்சிக்குட்பட்ட 14-ம் வார்டில் உள்ள ஊரம் குளம் தூய்மைப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை பேரூராட்சி தலைவர் பொன். ரவி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பெத்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் சதீஸ்குமார், செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story