குளம் தூர்வாரும் பணி தொடக்கம்


குளம் தூர்வாரும் பணி தொடக்கம்
x

குளம் தூர்வாரும் பணி தொடங்கியது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து ஏமன்குளத்தில் உள்ள குளத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணித்தொடக்க விழா நேற்று நடைபெற்றது. தி.மு.க. நாங்குநேரி ஒன்றிய செயலாளர்கள் எஸ்.ஆரோக்கிய எட்வின், ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா, துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் கிறிஸ்டி, தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள் சேர்மப்பாண்டி, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story