குளங்களில் படித்துறை கட்டும் பணி
மயிலாடுதுறை நகரில் குளங்களில் படித்துறை கட்டும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை நகரில் குளங்களில் படித்துறை கட்டும் பணியை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள்
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அறுபத்து மூவர் பேட்டை, பட்டமங்கல புதுத்தெரு, வள்ளலார் வடக்கு வீதி ஆகிய இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இங்கு தூய்மை பணிகளும் நடந்துள்ளன. இதை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள தட்டான் குளம், பட்டமங்கலம் புதுத்தெரு ஸ்ரீ நகர் காலனியில் உள்ள வண்ணான் குளத்தில் நடந்து வரும் படித்துறை அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணிகளை தரமாகவும், துரிதமாகவும், செய்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தூய்மை பணிகள்
அதனைத் தொடர்ந்து, வள்ளலார் வடக்கு வீதி, பட்டமங்கல புதுத்தெருவில் தூய்மை பணிகளை பார்வையிட்டார். அப்போது குப்பைகளை தேங்க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.