சேதமடைந்த குட்டையை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த குட்டையை சீரமைக்க வேண்டும்
திருப்பூர்
சேவூர்
சேவூர் அருகே தண்டுக்காரன்பாளையம் ஊராட்சிராமியம்பாளையம் அவினாசி-புளியம்பட்டி சாலையில் குட்டை உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராமியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நெடுஞ்சாலை துறையினர், ஒப்பந்ததாரர் மூலமாக புளியம்பட்டி சாலையில், சாலையைஅகலப்படுத்தி பாலம் கட்டப்பட்டது. பாலம் வேலை நடைபெற்ற போது மாற்று பாதையை குட்டையையொட்டி அமைத்திருந்தனர். தற்போது பாலம் வேலை முடிந்து விட்டது.வேலை முடிந்து பின்பும் குட்டையை சீரமைக்காமல் விட்டுச்சென்றுள்ளனர். இதனால் விரைவில் அவினாசி -அத்திக்கடவு திட்ட தண்ணீர் வரும் நிலையில் சீரமைக்காததால் குட்டை உடையும் அல்லது தண்ணீர் சாலைக்கு வரும் நிலை உள்ளது.
எனவே விரைவில் குட்டையை பலப்படுத்தி சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story