ரூ.5¾ லட்சத்தில் குளம் அமைப்பு


ரூ.5¾ லட்சத்தில் குளம் அமைப்பு
x

இறைவன்காடு ஊராட்சியில் ரூ.5¾ லட்சத்தில் குளம் அமைக்கப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இறைவன் காடு ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாய நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் 15-வது மத்திய நிதி குழு மானியத்தின் உதவியுடன் ரூ.5 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சுதந்திரதினத்திற்குள் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ேதது.

அதன்படி பணிகள் முடிக்கப்பட்டு சுதந்திர தினத்தன்று அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் குளத்தை பார்வையிட்டு, குளத்திற்கு அமிர்த குளம் என்றுபெயர் சூட்டி, பெயர் பலகை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது அரசு அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், மொழிப்போர் தியாகி ஏகாம்பரம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story