திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா: பாரம்பரிய உடையில் பங்கேற்ற கவுன்சிலர்கள்
திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சிவகங்கை
திருப்புவனம்
திருப்புவனம் யூனியன் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு யூனியன் தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். அலுவலக வளாகத்திற்குள் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு பானைகளில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் யூனியன் ஆணையாளர் அங்கயற்கண்ணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பூமாதேவி, சுப்பையா, ஈஸ்வரன், பிரியா ராமகிருஷ்ணன், மகாலெட்சுமி கஜேந்திரன், மேனேஜர் கார்த்திகா, கிளார்க் மாயாண்டிராஜன், மற்றும் அலுவலர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அலுவலர்கள் அனைவரும் ஒரே வண்ணத்தில் பாரம்பரிய சீருடை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
Related Tags :
Next Story