ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா


ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:45 PM GMT (Updated: 14 Jan 2023 6:45 PM GMT)

ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

ஆலங்குளம்

ஆலங்குளம் யூனியன் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வக்கொடி ராஜாமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்தசாரதி, திலகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுய உதவிக்குழு பெண்களுக்கு கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், யூனியன் உதவி பொறியாளர்கள், கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story