பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா
பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது.
கரூர்
காணியாளம்பட்டி அருகே உள்ள சின்னாண்டிபட்டியில் பழமையான பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உலக நன்மைக்காகவும், பருவம் தவறாது மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டியும் சுற்று பொங்கல் திருவிழாவை நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஊர் மக்கள் அனைவரும் கோவிலில் கூடி ஒவ்வொரு குடும்பத்து பெண்களும் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். பின்னர் பகவதி அம்மனுக்கு இளநீர், பால், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை அணிவித்து, பொங்கல் படையலிட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story