இந்திரா நர்சரி, தொடக்க பள்ளியில் பொங்கல் விழா


இந்திரா நர்சரி, தொடக்க பள்ளியில் பொங்கல் விழா
x

காவனூர் இந்திரா நர்சரி, தொடக்க பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

திமிரி ஒன்றியம் காவனூரில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் சே.லட்சுமி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ், ஆசிரியைகள் பிரேமலதா, கலையரசி, காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் எம்.கோபி வரவேற்றார்.

பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவ - மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆர்.ரஞ்ஜித்குமார் (காவனூர்), ஜி.சம்பத் (சாம்பசிவபுரம்), சுகன்யா தினகரன் (வரகூர் பட்டணம்), சுகன்யா பாபு (வரகூர்), அம்பேத்கர் (புங்கனூர்), காமராஜ் (குப்பம்), ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை எஸ்.சந்தியா நன்றி கூறினார்.


Next Story