கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா


கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா
x

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா தனது மனைவி மற்றும் மகனுடன், வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். கிராமிய கலைக்குழுவின் மூலம் கரகம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, காவடி, மாடாட்டம், மயிலாட்டம், பம்பை, சிலம்பம், தவில், நாதஸ்வரம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ராஜம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரஸ்வதி, சுற்றுலா அலுவலர் கஜேந்திரகுமார், வேளாண்மை இணை இயக்குநர் பாலா, உதவி இயக்குனர் ஊராட்சிகள் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story