தேனி கோர்ட்டில் பொங்கல் விழா


தேனி கோர்ட்டில் பொங்கல் விழா
x

தேனி கோர்ட்டில், ஜல்லிக்கட்டு காளையுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தேனி

தேனி வக்கீல் சங்கம் சார்பில், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வக்குமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில், மாவட்ட நீதிபதி சஞ்சாய் பாபா, மகளிர் கோர்ட்டு நீதிபதி திலகம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் ராஜ்மோகன், சார்பு நீதிபதி சுந்தரி, ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டுகள் ரமேஷ், லலிதாகுமாரி, நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். கோர்ட்டு வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் இந்த விழாவுக்கு ஜல்லிக்கட்டு காளை அழைத்து வரப்பட்டது. காளைக்கும் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் காளையுடன் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் புகைப்படம் எடுத்து உற்சாகமாக விழாவை கொண்டாடினர். விழாவில் இசை நாற்காலி, மவுன மொழி, கரும்பை கையால் உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story