அரசு பள்ளிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்


அரசு பள்ளிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகேஅரசு பள்ளிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் அசுபதி தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் திருமணி, பேச்சிமுத்து, மேரி அசந்தா சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மேலதிருச்செந்தூர் பஞ்சாயத்து தலைவர் மகாராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல், கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவிகள் கிராமிய கும்மி பாடல்களை பாடி உற்சாகமாக நடனமாடினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி மற்றும் ஆசிரியைகள், எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் பாரம்பரிய பட்டு வேஷ்டி மற்றும் பட்டாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.


Next Story