திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பொங்கல் விழா


திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பொங்கல் விழா
x
தினத்தந்தி 14 Jan 2023 6:09 PM GMT (Updated: 14 Jan 2023 6:10 PM GMT)

திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் மண்டல இணைப்பதிவாளர் சி.பெ.முருகேசன் தலைமை தாங்கினார். துணைப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், சம்பத், சுவாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெயலாட்சியர் தர்மேந்திரன், கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் கரும்பு தோரணம் கட்டி புதிய பானையில் பொங்கல் வைத்து வழிபாட்டனர். அதைத் தொடர்ந்து உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் செயலாளர் தண்டபாணி நன்றி கறினார்.


Next Story