பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பொங்கல் பண்டிகை; தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

பொங்கல் பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொங்கல் பண்டிகை காலத்தில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தாம்பரம்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

*தாம்பரம் - நெல்லை(வண்டி எண்: 06049) இடையே இரவு 10.20 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ஜனவரி 14-ந் தேதி (சனிக்கிழமை) தாம்பரத்திலிருந்து இயக்கப்படுகிறது.

நெல்லை - தாம்பரம்(06050) இடையே மாலை 5.50 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் ஜனவரி 18-ந் தேதி (புதன்கிழமை) நெல்லையிலிருந்து இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story