பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலை அருகில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கடை விற்பனையாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளரும், பொது வினியோக திட்ட ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினருமான கே.எம்.சந்திரமோகன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய சந்திரமோகன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1,000 ஆகியவை வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்து பேசினார். இதில் ஓய்வு பெற்ற பொது வினியோக திட்ட துணை பதிவாளர் ரவிச்சந்திரன், ரேஷன்கடை விற்பனையாளர்கள் கணேசன், மஞ்சுநாதன், பாரதிவிமல், ராஜ், நுகர்வோர் சங்க மாவட்ட தலைவர் படையப்பா, இணை செயலாளர்கள் சீனிவாசன், அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story