தஞ்சை மாவட்டத்தில்7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.73 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு


தஞ்சை மாவட்டத்தில்7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.73 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
x

தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.73 கோடியில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.73 கோடியில் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது என எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார்.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீள கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான தொடக்கவிழா தஞ்சை புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் உள்ள ரேஷன் கடையில் நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

ரூ.73 கோடி

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று (நேற்று) முதல் வழங்கப்படுகிறது.

இதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 1,183 நியாயவிலை கடைகளில் உள்ள 7,00,505 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.73 கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் ஈஸ்வர், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story