பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி


பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
x

சோளிங்கர் ஒன்றியத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த போளிப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் போளிப்பாக்கம், தப்பூர், கோவிந்தங்கல், நெறிஞ்சிந்தாங்கல் ஆகிய ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான அ.ம.கிருஷ்ணன் தலைமையில் 2,351 குடும்ப அட்டைதாரர்களுக்கு வேஷ்டி, சேலை, பொங்கல் பரிசு ரூ.1,000, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கினர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், சங்க செயலாளர் சடகோபன், சங்க துணை தலைவர் நரசிம்மன் மற்றும் சங்க இயக்குனர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பாண்டிய நல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கொண்டபாளையம், தென்வன்னியர் வீதியில் சங்க செயலாளர் ஜெயகோபி தலைமையிலும், புலிவலம் கிராமத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் நதியா மதன்குமார் தலைமையிலும், சோளிங்கர் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் ரவி தலைமையிலும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் சோளிங்கர் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி உறுப்பினர்கள் அருண் ஆதி, லோகேஸ்வரி சரத்பாபு, வெங்கடேசன், மோகனா சண்முகம், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் பவுன் ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் வெங்குப்பட்டு ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள்.

இதே போல நீலகண்டராயன் பேட்டையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் சங்க தலைவர் டி.கிருஷ்ணமூர்த்தி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். சங்க செயலாளர் சேதுபதி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story