130 ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பி வைப்பு


130 ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பி வைப்பு
x

அணைக்கட்டு தாலுகாவில் 130 ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

வேலூர்

அணைக்கட்டு தாலுகாவில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்புடன் கரும்பு வழங்க உள்ளதால் பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் இருந்து கரும்புகள் வரவழைக்கப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தாலுகாவில் 130 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் 70 ஆயிரத்து 51 குடும்ப அட்டைகளுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, ரூ.1,000 உள்ளிட்டவைகள் வழங்குவதற்காக அவை நேற்று மாலை அணைக்கட்டு தாலுகாவிற்கு வந்தன. அங்கிருந்து வட்ட வழங்கல் அலுவலர் பழனி தலைமையில் 130 ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தபிறகு அனைத்துகடைகளிலும் பரிசு தொகுப்பு வகுப்புகள் வழங்கப்படும் என வட்ட வழங்கல் அதிகாரி பழனி தெரிவித்தார்.


Next Story