ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு


ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
x

காட்டுப்பாக்கம் ஊராட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தணிகைவேல் தலைமை தாங்கினார். ஒன்றியக் குழு உறுப்பினர் கவுரி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன், மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.பெருமாள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story