பொங்கல் விடுமுறை எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்


பொங்கல் விடுமுறை எதிரொலி: பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் விடுமுறை காரணமாக பிச்சாவரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த கிள்ளை அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்ட இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட மாங்குரோவ் என்னும் சதுப்பு நிலக் காடுகள் உள்ளது.

4,600 கிளை கால்வாய்களுடன் இயற்கை எழில் கொஞ்சும் சதுப்புநில காடுகளை பார்க்க பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை காலங்கள், பண்டிகை கால விடுமுறை, வார விடுமுறை நாட்களில் கடலூர் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், உறவினர்களுடன் வருவார்கள். அவ்வாறு வரும் அவர்கள் சுற்றுலாத்துறை மூலம் இயக்கப்படும் படகுகளில் சவாரி செய்து, சதுப்பு நிலக்காடுகளை கண்டு ரசித்து செல்வார்கள்.

படகு சவாரி

அந்த வகையில் பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் காணும் பொங்கலையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக உறவினர்களுடன் வந்து குவிந்தனர்.

தொடர்ந்து அவர்கள் துடுப்பு படகுகள், மோட்டார் படகுகளில் ஆனந்தமாக படகு சவாரி செய்து, மாங்குரோவ் காடுகளை கண்டு ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் உயர் கோபுரத்தில் ஏறி பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் அழகை கண்டு ரசித்தனர். வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவு மற்றும் தின்பண்டங்களை அங்குள்ள பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். சிலர் சுற்றுலா மைய வளாகத்தில் உள்ள கடல்கன்னி சிலை முன்பு நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டதால், நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையம் களைகட்டியது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை கிளை மேலாளர் தினேஷ் குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


Next Story