கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தீர்த்தகுடம் ஊர்வலம்
கோவில்பட்டி காளியம்மன் கோவிலில் பொங்கல் விழா தீர்த்தகுடம் ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி ஸ்டாலின் காலனி அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் 43-ம் ஆண்டு வைகாசி பொங்கல் விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து ஏராளமான பெண்கள் தீர்த்த குடம், பால் குடம் எடுத்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தார்கள்.
ஊர்வலத்தில் கோவில் தர்மகர்த்தா வெள்ளை பாண்டி, கோவில் தலைவர் சங்கரன், செயலாளர் முருகன், பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
ஊர்வலம் கோவிலை அடைந்ததும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story