வீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியது
பொங்கல் பரிசு பெற திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்யும் பணியை நேற்று தொடங்கினார்கள்.
வீடு, வீடாக டோக்கன்
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்புடன் ரூ.1,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 98 ஆயிரம் அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 310 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது.
ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று முதல் வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினார்கள். கிராமம், தெரு, பெயர் மற்றும் நாள், நேரம் ஆகிய விவரங்களுடன் டோக்கன் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டன.
திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று இந்த பணியை மேற்கொண்டனர். ஒரு நாளைக்கு 200 முதல் 250 டோக்கன் வரை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
9-ந் தேதி முதல் வினியோகம்
டோக்கனில் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசை பெற்றுச்செல்லலாம். வருகிற 8-ந் தேதி வரை டோக்கன் வழங்கப்பட உள்ளது.
9-ந் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொவீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியதுவீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியதுவீடு, வீடாக டோக்கன் வினியோகம் தொடங்கியதுங்கல் பரிசு வினியோகம் தொடங்கப்படுகிறது. ரேஷன்கார்டில் இடம்பெற்ற குடும்ப உறுப்பினர் யாரேனும் ஒருவர் சென்று பொங்கல் பரிசை பெறலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்லடம்
பல்லடம் வட்டாரத்தில் மொத்தம் 83 ஆயிரத்து 620 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில், சர்க்கரை கார்டுகள் 3,200 தவிர்த்து 80,420 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேஷன் கடை ஊழியர்கள் வீடு,வீடாக சென்று டோக்கன் வழங்கி வருகிறார்கள்.