பொங்கல் வைத்து வழிபாடு
பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம்-வலசைக்காடு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இப்பகுதியை சேர்ந்த பெண்கள் பொங்கல் வைத்து கண்ணனுக்கு பிரியமான உணவு வகைகள் பழங்கள், லட்டு, வெண்ணெய் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞர் நற்பணி மன்றமத்தினர் செய்திருந்தனர்.
இதே போல திருவள்ளூர், நெடுங்குளம், மேலாயூர், லட்சுமிபுரம், சிறுபாலை, துகவூர், கரும்பு கூட்டம், வல்லக்குளம், கண்டனி, தெற்கு சமுத்திரம், சீவாலதி போன்ற கிராமங்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.
Related Tags :
Next Story