தைப்பூச தேரோட்ட முகூர்த்தக்கால் பூஜை


தைப்பூச தேரோட்ட முகூர்த்தக்கால் பூஜை
x
திருப்பூர்


திருப்பூர் அருகே உள்ள அலகுமலை அகிலாண்ட விநாயகர், பெரியநாயகி அம்மன் உடனுறை ஆதி கைலாசநாதர், வலுப்பூரம்மன், ஆஞ்சநேயர் பரிவாரங்களுடன் அலகுமலையில் வீற்றிருக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சாமிக்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் தைப்பூச தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவிலில் அடுத்து வரும் தை மாதத்தில் நடைபெறும் தைப்பூச தேர் திருவிழாவையொட்டி அலகுமலை, ஆதி கைலாசநாதர் கோவிலில் திருத்தேர் முகூர்த்தக்கால் போடும்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அலகுமலை கோவில் திருப்பணிக்குழுத்தலைவர் சின்னுக்கவுண்டர் தலைமை தாங்கினார். சிவாச்சாரியார்கள் சண்முகம், சத்யோஜாத சிவம், வாமதேவ சிவம் ஆகியோர் பூஜைகள் செய்தனர். நிகழ்ச்சியில் கரட்டுப்பாளையம் பழனிச்சாமி, சிதம்பரம், சண்முகம், ரமேஷ், குமார், திருத்தேர் 'தச்சர்' கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story