பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட காவடி திருவிழா


பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட காவடி திருவிழா
x
தினத்தந்தி 7 Jun 2023 12:15 AM IST (Updated: 7 Jun 2023 1:02 PM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே வழுவூரில் பொன்னம்மா காளியம்மன் கோவில் பால்குட காவடி திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வழுவூர் கிராமத்தில் அருள்மிகு பொன்னம்மா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 50-வது ஆண்டு திரு நடன ஊஞ்சல் உற்சவ திருவிழா கடந்த 29-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினசரி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று பால்குட காவடி திருவிழா நடந்தது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்து பக்தர்கள் வீரட்டேஸ்வரர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக மேள வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கைகள், காளி ஆட்டத்துடன் கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு 108 சங்காபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வழுவூர் கிராமமக்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் எதிர்வரும் 9-ந் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story