மழைநீரால் சேதமடைந்த பகுதிகளை பொன்னேரி சப்-கலெக்டர் ஆய்வு
மழைநீரால் சேதமடைந்த பகுதிகளை சப்-கலெக்டர் ஆய்வு செய்தனர்.
திருவள்ளூர்
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் சுற்றுவட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது. மேலும் இந்த பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இறால் பண்ணை, வண்ண மீன் பண்ணை ஆகியவற்றின் கழிவு நீரால் நெற்பயிர்கள் சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், தாசில்தார் செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் கனிமொழி ஆகியோர் பெரியகரும்பூர், தேவம்பட்டு, அகரம் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது பொதுப்பணித்துறையினால் பராமரிக்கப்பட்டு வரும் பகுதிகளில் அடைப்பு ஏற்பட்டால் அதனை உடனே தூர்வார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story