சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.900-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.900-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.900-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் கரட்டூர் ரோட்டில் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.560-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.330-க்கும், செண்டு மல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.53-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.20-க்கும் ஏலம்போனது.


Next Story