சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்
x

சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.850-க்கு ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்தில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 3.5 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள். இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.455-க்கும், முல்லை ரூ.220-க்கும், காக்கடா ரூ.235-க்கும், செண்டுமல்லி ரூ.32-க்கும், பட்டுப்பூ ரூ.67-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.850-க்கும், சம்பங்கி ரூ.140-க்கும், அரளி ரூ.100-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.


Next Story