சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,780-க்கு ஏலம்; ஒரே நாளில் ரூ.1,750 உயர்ந்தது


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,780-க்கு ஏலம்; ஒரே நாளில் ரூ.1,750 உயர்ந்தது
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 780-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் ரூ.1,750 உயர்ந்தது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3 ஆயிரத்து 780-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் ரூ.1,750 உயர்ந்தது.

மல்லிகைப்பூ ரூ.3,780

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.

இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.3,780-க்கும், முல்லை ரூ.560-க்கும், காக்கடா ரூ.900-க்கும், செண்டுமல்லி ரூ.130-க்கும், பட்டுப்பூ ரூ.78-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.620-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.220-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.140-க்கும் ஏலம் போனது.

விலை உயர்வு

நேற்று முன்தினம் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,030-க்கும், முல்லை ரூ.400-க்கும், காக்கடா ரூ.500-க்கும், செண்டுமல்லி ரூ.125-க்கும், பட்டுப்பூ ரூ.91-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.710-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ ஒரு கிலோவுக்கு ரூ.1,750 அதிகரித்திருந்தது. அதேபோல் முல்லை கிலோவுக்கு ரூ.160-ம், காக்கடா ரூ.400-ம், சம்பங்கி ரூ.50-ம், அரளி ரூ.20-ம், துளசி ரூ.10-ம், செண்டுமல்லி ரூ.5-ம் விலை உயர்ந்திருந்தது. மேலும் பட்டுப்பூ 13 ரூபாயும், செவ்வந்தி 20 ரூபாயும் விலை குறைந்திருந்தது.

கேரளாவில் ஓணம் பண்டிகை நெருங்குவதாலும், முகூர்த்த நாட்கள் இருப்பதாலும் பூக்கள் விலை உயர்ந்ததாக பூ மார்க்கெட் நிர்வாகிகள் கூறினார்கள்.


Next Story