சத்தியமங்கலம் மார்க்கெட்டில் செண்டுமல்லி பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வராததால் கீழே கொட்டிய விவசாயிகள்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் செண்டுமல்லி பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வராததால் கீழே கொட்டிய விவசாயிகள்
x

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வராததால் அதை விவசாயிகள் கீழே கொட்டிவிட்டு சென்றனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் செண்டுமல்லி பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வராததால் அதை விவசாயிகள் கீழே கொட்டிவிட்டு சென்றனர்.

பூ மார்க்கெட்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விவசாயிகள் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் செண்டுமல்லி பூ பயிரிட்டு உள்ளனர். இங்கு விளையும் பூக்கள் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு தினமும் கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை என பல்வேறு விசேஷங்கள் வந்ததால் செண்டுமல்லி பூ கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை ஆனது.

கீழே கொட்டிய விவசாயிகள்

தற்போது விசேஷ நாட்கள் முடிந்து விட்டதால், செண்டுமல்லி பூ நேற்று காலையில் கிலோ ஒன்று ரூ.20-க்கு ஏலம் போனது. நேரம் செல்ல செல்ல செண்டுமல்லி பூ படிப்படியாக குறைந்து 10 ரூபாய்க்கு கூட ஏலம் செல்லாத நிலை ஏற்பட்டது.

இதனால் செண்டுமல்லி பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர். மேலும் செண்டுமல்லி பூக்களை ஏலம் கேட்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதைத்தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த செண்டுமல்லி பூக்களை மூட்டைகளில் இருந்து கீழே கொட்டிவிட்டு வேதனையுடன் வீட்டுக்கு திரும்பி சென்றனர். இதனால் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story