சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.415-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.415-க்கு ஏலம்
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் 4 டன் பூக்களை எடுத்து வந்திருந்தார்கள்.
இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.350-க்கும், முல்லை ரூ.200-க்கும், காக்கடா ரூ.225-க்கும், செண்டுமல்லி ரூ.25-க்கும், பட்டுப்பூ ரூ.56-க்கும், ஜாதிமல்லி ரூ.350-க்கும், கனகாம்பரம் ரூ.415-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.120-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story