உரிய விலை கிடைக்காததால் வேதனை: சம்பங்கி பூக்களை சாலையோர பள்ளத்தில் கொட்டிய விவசாயிகள்
உரிய விலை கிடைக்காததால் வேதனை: சம்பங்கி பூக்களை சாலையோர பள்ளத்தில் கொட்டிய விவசாயிகள்
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வழக்கம்போல் நேற்று காலையில் பூக்கள் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சம்பங்கி பூக்கள் முதலில் கிலோ 10 ரூபாய்க்கும், அதன்பின்னர் அதற்கு கிழேயும் ஏலம் போனது. இதுபற்றி தகவல் அறிந்த பெரியகுளம் பகுதி விவசாயிகள் பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வராமல் அங்குள்ள சாலையோர
பள்ளத்தில் கொட்டினார்கள். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் சாகுபடி செலவை கூட எண்ணிப்பார்க்காமல் பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு செல்கிறோம். ஆனால் பறிக்கும் செலவை விட குறைவாக விற்றால் நாங்கள் என்ன செய்வது? என்று வேதனைப்பட்டார்கள்.
Related Tags :
Next Story