சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.860-க்கு ஏலம்
சத்தி மார்க்கெட்டில் கனகாம்பரம் கிலோ ரூ.860-க்கு ஏலம்
ஈரோடு
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 3 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.735-க்கும், முல்லை ரூ.360-க்கும், காக்கடா ரூ.255-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.51-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.860-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.
Related Tags :
Next Story