சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது; கிலோ ரூ.945-க்கு ஏலம்


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது; கிலோ ரூ.945-க்கு ஏலம்
x

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.945-க்கு ஏலம் போனது.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை குறைந்தது. ஒரு கிலோ ரூ.945-க்கு ஏலம் போனது.

மல்லிகைப்பூ

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இதில் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.1,400-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.650-க்கும், செண்டுமல்லி ரூ.80-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், கனகாம்பரம் ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது.

இதேபோல் நேற்று முன்தினம் மல்லிகைப்பூ (கிலோ) ரூ.2 ஆயிரத்து 345-க்கும், முல்லை ரூ.1,600-க்கும், காக்கடா ரூ.1,300-க்கும், செண்டுமல்லி ரூ.75-க்கும், பட்டுப்பூ ரூ.90-க்கும், ஜாதிமல்லி ரூ.1,200-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.40-க்கும், அரளி ரூ.200-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் விற்பனையானது.

விலை குறைந்தது

நேற்று முன்தினத்தை விட நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோவுக்கு ரூ.945 குறைந்திருந்தது. அதேபோல் காக்கடா ஒரு கிலோ 650 ரூபாயும், ஜாதிமல்லி 200 ரூபாயும் குறைவாக ஏலம் போனது. மேலும் கனகாம்பரம் ஒரு கிலோ 200 ரூபாய் விலை உயர்ந்து விற்பனையானது.

இதுபற்றி பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும்போது, 'கிறிஸ்துமஸ் என்பதால் கேரள மாநில வியாபாரிகள் நேற்று முன்தினம் வந்து அதிக விலைக்கு பூக்களை ஏலம் எடுத்து சென்றனர். கிறிஸ்துமஸ் முடிந்ததால் நேற்று கேரள வியாபாரிகள் குறைவான பேரே வந்திருந்தனர். இதனால் பூக்கள் விலை குறைந்து விட்டது' என்றனர்.


Next Story