நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நாமக்கல்
நாமக்கல்:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் நேற்று நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் தேச நலன் மற்றும் மக்கள் நலனுக்காக திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டது. இதில் சுமார் 100 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதையொட்டி அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை நாமக்கல் தர்ம ரஷ்ண ஸமிதி, ஆன்மிக இந்து கூட்டமைப்பு மற்றும் ஆன்மிக இந்து சமய பேரவை ஆகியவை இணைந்து செய்து இருந்தன. இந்த பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பா.ஜனதா சார்பில் வீடுகளில் ஏற்றுவதற்காக தேசியக்கொடி வழங்கப்பட்டது.
Next Story