அரூர் காமாட்சி அம்மன் கோவிலில் அய்யப்ப சாமிக்கு சிறப்பு பூஜை
தர்மபுரி
அரூர்:
அரூர் காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தர அய்யப்ப சாமிக்கு 43-வது ஆண்டு விழாவையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, மகா கணபதி ஹோமம் ஆகியவையும், 7 மணிக்கு கடைவீதி பிள்ளையார் கோவிலில் இருந்து பஞ்ச தீர்த்த கலசம், பால் குடங்களுடன் ஊர்வலமும் நடந்தது. 9 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், அக்னி காரியம் ஹோமம், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவில் போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பம்பை, சிலம்பாட்டம், வாணவேடிக்கையுடன் சாமி திருவீதி உலா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அய்யப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
Next Story