கும்மனூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட பூமிபூஜை-முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்பு
பாலக்கோடு:
பாலக்கோடு ஒன்றியம் கும்மனூரில் ஜெ.ஜெ.அம்மா நகர், அருந்ததியர் காலனி, புதுத்தெரு, செட்டியார்தெரு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களின் நீண்ட நாள் குடிநீர் தேவையை நிறைவேற்ற, பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமிபூஜை செய்தும், அடிக்கல் நாட்டியும் பணியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா சரவணன், ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை கோபால், முன்னாள் அரசு வக்கீல் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.