பாப்பாரப்பட்டி பேரூராட்சி வாரச்சந்தையில் ரூ.2¾ கோடியில் கடைகள் கட்ட பூமிபூஜை


பாப்பாரப்பட்டி பேரூராட்சி வாரச்சந்தையில் ரூ.2¾ கோடியில் கடைகள் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 8 Feb 2023 12:15 AM IST (Updated: 8 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள வாரச்சந்தையை மேம்படுத்தும் விதமாக அங்கு ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பில் கடைகள் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் பிருந்தா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி கலந்து கொண்டு, பூமிபூஜை செய்து, பணியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் மல்லிகா, நகர தி.மு.க. செயலாளர் சண்முகம், இளநிலை பொறியாளர் பழனி, பேரூராட்சி கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வி, கல்பனா, தமிழ்ச்செல்வன், முன்னாள் பேரூராட்சி தலைவர் திருவேங்கடம், முன்னாள் கவுன்சிலர் பாண்டியன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ், தி.மு.க. நிர்வாகிகள் சரவணன், முனுசாமி, சேகர், காசி, ரத்தினவேல், துரை, வேலு, ராமமூர்த்தி, வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story