தேய்பிறை அஷ்டமியையொட்டி கல்லுக்குறிக்கி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை


தேய்பிறை அஷ்டமியையொட்டி கல்லுக்குறிக்கி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அஸ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம் ஆகியவையும், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தன. பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பகல் 12 மணிக்கு காலபைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன. பெண் பக்தர்கள் பூசணி மற்றும் தேங்காய் ஆகியவற்றில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் சூரன் குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story