பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா


பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
x

பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழாவிற்காக நாள் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் அமாவாசையன்று தீ மிதி திருவிழா என அழைக்கப்படும் பூக்குழி திருவிழா நடைபெறும். இதில் 15,000 பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதிப்பார்கள். இந்த ஆண்டு பூக்குழி திருவிழா வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 21-ந் தேதி பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி பூக்குழி திருவிழாவிற்காக நாள் செய்யும் விழா நடைபெற்றது. இதில் நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன், துணை சேர்மன் செல்வமணி, கோவில் முன்னாள் தலைமை பூசாரி ஹரிஹரன், நிர்வாக அதிகாரி சத்திய நாராயணன், கோவில் பூசாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story