முப்புடாதி அம்மன் கோவிலில் இன்று பூக்குழி திருவிழா
முப்புடாதி அம்மன் கோவிலில் இன்று பூக்குழி திருவிழா நடைபெற்றது.
விருதுநகர்
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூர் 13 சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முப்புடாதி அம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் போன்ற 16 வகை அபிஷேகத்துடன் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து நேற்று அம்மன் பூப்பல்லாக்கில் வீதி உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில் அம்மன் தண்டியில் சப்பரத்தில் வீதி உலா வந்து பூ வளர்க்கப்படுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் பூக்குழி திருவிழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 13 சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள், தலைவர் கனகராஜ், கணக்கர் பவுன்ராஜ், செயலாளர் கல்யாணி மற்றும் 13 சமுதாய தலைவர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story