பூக்குழி இறங்கும் விழா
இளையான்குடி அருகே உள்ள தோக்கனேந்தல் கிராமத்தில் பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடந்தது.
சிவகங்கை
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள தோக்கனேந்தல் கிராமத்தில் பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா நடந்தது. இதையொட்டி கடந்த. 27-ந் தேதி முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம், காவடி எடுத்து பூக்குழி இறங்கினார்கள்.. திருவிழாவை முன்னிட்டு இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. தோக்கனேந்தல் கிராமத்தின் நிர்வாக குழு தலைவர் நாகராஜன் தலைமையில் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related Tags :
Next Story