பூணூல் மாற்றும் நிகழ்ச்சி
பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்டம், நஞ்சை புகழூர் அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீ புகழூர் ஹாலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டம் ஆவணி மாதத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை ஆடி மாதத்தில் நேற்று ஆவணி அவிட்டம் நட்சத்திரம் வந்தது. இதையடுத்து நேற்று ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு காலையிலேயே பூணூல் மாற்றும் ஆண்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பிரம்மஸ்ரீ ரகுராம சாஸ்திரி கலந்து கொண்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். இதில் கிராமவாசிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பூணூலை மாற்றிக் கொண்டார்கள். அத்துடன் சாஸ்திரிகள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர். பின்னர் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.