ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா
ஏழைகாத்த அம்மன் கோவில் திருவிழா நடந்தது
மயிலாடுதுறை
சீர்காழி
சீர்காழி தென்பாதியில் கருப்பண்ணசுவாமி, ஏழைகாத்தஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூைஜகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை உப்பனாற்றில் இருந்து பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் முளைப்பாரிகளை தலையில் சுமந்து திட்டை ரோடு, தென்பாதி வழியாக உப்பனாற்றை வந்தடைந்தனர். பின்னர் ஆற்றில் முளைப்பாரியை விட்டனர். தொடர்ந்து ஏழு கன்னி சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story