அரசுப் பள்ளிக்கு மேலும் ரூ.3.5 கோடி மதிப்புள்ள நிலம் தானமாக வழங்கினார் பூரணம் அம்மாள்
மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
மதுரை சர்வேயர் காலணியைச் சேர்ந்தவர் ஆயி பூரணம் அம்மாள்(52). வங்கி ஊழியரான இவருடைய மகள் ஜனனி (வயது 30) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால், மனம் உடைந்த பூரணம் அம்மாள், மகளின் விருப்பப்படி , தங்களுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்குத் தானமாகக் கொடுத்தார். அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சேவையைப் பாராட்டி தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பூரணம் அம்மாளுக்கு, ஆளுநர் முன்னிலையில் சிறப்பு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில், மதுரை கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு மேலும் 91 செண்ட் நிலத்தைப் பூரணம் அம்மாள் வழங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.3.5கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.