குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனை


குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனை
x

குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனை

திருப்பூர்

போடிப்பட்டி

குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளப்பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தீவன உற்பத்தி

குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மானாவாரியில் அதிக அளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.இதுதவிர இறவைப் பாசனம், பிஏபி பாசனம், சொட்டுநீர்ப் பாசனம் என பல்வேறு பாசன முறைகளில் இங்கு மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.உணவுப் பயன்பாட்டுக்காக மட்டுமல்லாமல் கால்நடைத் தீவன உற்பத்தியிலும் மக்காச்சோளம் முக்கிய பங்கு வகிப்பதால் ஆண்டு முழுவதும் தேவை இருந்து கொண்டுள்ளது.இதனால் மக்காச்சோள சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்தநிலையில் நடப்பு ஆண்டில் படைப்புழுக்களின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது 'அதிக பராமரிப்பு தேவைப்படாத மானாவாரிப் பயிராக மக்காச்சோளம் இருந்தது.ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட படைப்புழுக்கள் தாக்குதலுக்குப் பிறகு சீரான இடைவெளியில் மருந்துகள் தெளித்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

மகசூல் இழப்பு

படைப்புழுக்களின் தாக்குதல் தொடங்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தத் தவறி விட்டால் பின்னர் அதனைக் கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக மாறி விடுகிறது.பயிர் முளை விட்டு சுமார் 10 நாட்களில் தொடங்கி கதிர்ப் பருவம் வரை படைப்புழுக்களின் தாக்குதல் தொடர்கிறது.இதனால் ஆரம்ப கட்டத்தில் மருந்து தெளிக்கத் தவறிய ஒருசில விவசாயிகள் பயிரையே கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அவ்வாறு கைவிடப்பட்ட விளைநிலங்களில் பல மடங்காகப் பெருகும் படைப்புழுக்கள் அருகிலுள்ள தோட்டங்களிலும் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது.தற்போது ஒருசில பகுதிகளில் மக்காச்சோளம் அறுவடை தொடங்கியுள்ளது.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கான தீவன உற்பத்திக்கான தேவை தொடர்ந்து இருப்பதால் சீரான விலை கிடைத்து வருகிறது.ஆனால் ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து மக்காச்சோளம் வாங்குவதில் தீவன உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.எனவே விலை குறையும் நிலை ஏற்படலாம் என்பது விவசாயிகளின் அச்சமாக உள்ளது.இந்தநிலையில் படைப்புழுக்களால் ஏற்படும் மகசூல் இழப்பு விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.எனவே வேளாண்மைத்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கடந்த காலங்களைப் போல படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் மருந்துப் பொருட்களை முழுமையான மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று விவசாயிகள் கூறினர்.Next Story