சாலையில் உலர வைக்கப்படும் மக்காச்சோளம்


சாலையில் உலர வைக்கப்படும் மக்காச்சோளம்
x

சாலையில் உலர வைக்கப்படும் மக்காச்சோளம்

திருப்பூர்

குடிமங்கலம்

குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் உலர்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மக்காச்சோளம் சாகுபடி

குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயத்துடன் இணைந்த தொழிலாக கால்நடை வளர்ப்பு நடைபெற்றுவருகிறது. குடிமங்கலம் பகுதியில் விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் அதிகமுள்ள நிலையில் விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்பகுதிகளில் மக்காச்சோளம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 90 முதல் 110 நாட்களில் மக்காச்சோளம் அறுவடைக்கு தயாராகி விடும். மக்காச்சோளம் கோழி தீவனமாகவும், மக்காச்சோளத் தட்டு கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கிணற்றுப் பாசனம் மூலமாகவும் பிஏபி பாசனம் மூலமாகவும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.

உலர் களங்கள்

இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில் அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பெதப்பம்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உலர்களங்களில் உலர வைத்து குடோன்களில் இருப்பு வைத்து விலை ஏற்ற இறக்கங்களை பொறுத்து விற்பனை செய்ய முடியும். ஆனால் கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் போதிய உலர்களம் இல்லாததால் அறுவடை செய்யப்பட்ட மக்காச்சோளத்தை அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளில் உலர வைத்து வருகின்றனர். சோமவாரப்பட்டி ஐயப்பன் கோவில் தெருக்களில் உள்ள சாலைகளில்உலர வைத்து வருகின்றனர். இதனால் கிராமப்புறங்களில் உலர்களம் இல்லாத பகுதிகளில் உலர்களங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story