ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்


ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்
x

ஈரோட்டில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டம்

ஈரோடு

ஈரோடு

ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக பகுதியில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். பாலு முன்னிலை வகித்தார்.

நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 4-ஜி சேவையை வழங்கிட வேண்டும். அதற்கு தடையாக உள்ள அனைத்து விதிமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும். தேசிய பணமாக்கல் திட்டம் எனும் பெயரில் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story