2-வது நாளாக பொதுமக்கள் போராட்டம்
அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி ஏ.டி.காலனியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா கேட்டு அங்குள்ள புறம்போக்கு இடத்தில் குடிசைகள்அமைக்க முயன்றனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த அவினாசி தாசில்தார் ராஜேஸ் " இது குட்டை புறம்போக்கு இடம் இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை. வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் நேற்று மீண்டும் 80-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் குடிசை அமைக்க முயற்சித்தனர். உடனே அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உள்ளிட்டோர் சம்பவ இடம் வந்து உயர்அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் ஆனால் அவர்கள் உயர்அதிகாரிகள் இங்கு வந்து எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை நாங்கள் இங்கிருந்து போகமாட்டோம் என்றனர். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் போலீசில் கெடுத்த புகாரின்பேரில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க போலீசார் முயன்றதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்