ஆமைவேகத்தில் நடைபெறும் துறைமுக பணி


ஆமைவேகத்தில் நடைபெறும் துறைமுக பணி
x

ஆமைவேகத்தில் துறைமுக பணி நடைபெறுகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ராமேசுவரத்திற்கு அடுத்தபடியாக அதிகப்படியான மீன் பிடி படகுகளை கொண்ட பகுதி என்றால் அது மண்டபம் தான். 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் உள்ளன. அதுபோல் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் மண்டபம் தெற்குதுறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு வருகின்றன. ஒரே ஒரு துறைமுகம் மட்டுமே உள்ள நிலையிலும் அது மிகச்சிறிய அளவிலான துறைமுகமாக உள்ளதால் அதிகமான படகுகளை நிறுத்த முடியாமல் மீனவர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.20 கோடி நிதியில் புதிதாக துறைமுகம் கட்டும் பணியானது மீன்வளத்துறையின் மூலம் தொடங்கப்பட்டது. இந்த பணியை கடந்த ஜூலை மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையிலும் துறைமுகத்தின் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை. டீ வடிவ வடிவில் கட்டப்பட்டு வரும் இந்த துறைமுகம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இன்னும் மூன்று மாதத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாவது இந்த துறைமுகம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story